/ சிறுவர்கள் பகுதி / காட்டுத் தாத்தா
காட்டுத் தாத்தா
சிறுவர், சிறுமியருக்கு அறிவூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உயிரினங்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற நெகிழ்வூட்டும் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.மொத்தம், 12 கதைகள் தொகுப்பில் உள்ளன. ஒவ்வொன்றும் வேவ்வேறு சிந்தனையை வெளிப்படுத்துகின்றன. எளிய மொழி நடையில் திருப்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா கதைகளும் உயர்ந்த நெறியை போதிக்கின்றன.காட்டு விலங்குகளை கதாபாத்திரங்களாக உடைய பல கதைகள் உள்ளன. விலங்குகளின் செயல்களை கோடிட்டு நற்சிந்தனை விதை ஊன்றப்பட்டுள்ளது. படிப்போரை சிந்திக்க வைக்கும் தொகுப்பு நுால்.– மதி