/ கட்டுரைகள் / காவிய நாயகியர்

₹ 370

காவிய நாயகியரான மணிமேகலை, ஊர்மிளை, திரவுபதி உள்ளிட்ட ஒன்பது பேர் சிறப்புகளை விவரிக்கும் நுால். காவிரி பூம்பட்டினம் மற்றும் மணிமேகலை நிலை பற்றி கூறப்பட்டுள்ளது. தென்றல் காற்று, அந்திக்கால ரம்மியம், உய்யவன பூ மணம் மயக்கம் தந்த போதிலும், மாதவி பெற்ற மணிமேகலையின் கண்கள், அருளுலகம் தேடி அலைபாய்ந்ததாக கூறப்பட்டுள்ளது. பாரதப் போர் முடிந்த நிலையில், பாண்டவர்களின் கலக்கம் போக்க திரவுபதி கூறிய செய்திகள் ஆர்வத்தை துாண்டுகின்றன. உண்மையை விளக்கும் முறை நல்ல வழிகாட்டலாக உள்ளது. கபிலவஸ்து நகரிலிருந்து கவுதம புத்தர் கிளம்பிய பின், யசோதரா பட்ட இன்னல்கள், மீண்டும் நாடு திரும்பிய போது இருந்த மனநிலையை வசன கவிதையில் கூறுகிறது. காவிய நாயகியர் பற்றி சுவாரசிய தகவல்கள் உடைய நுால். – முகில்குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை