/ கதைகள் / காதல் பொம்மைகள்
காதல் பொம்மைகள்
செங்கைப் பதிப்பகம், 349/166, அண்ணா சாலை, செங்கல்பட்டு-603 002. (பக்கம்: 396). தாய்லாந்தில் காதலர்கள் வினோதமான ஆடை அணிகலன்களுடன் கூடிய பொம்மைகளைப் பரிசளித்துக் கொள்வார்களாம். அவற்றிற்கு "காதல் பொம்மைகள் என்றே பெயராம்! (நாவலின் தலைப்பு வந்து விட்டது!) அப்படி ஒரு காதல் ஜோடி இந்தப் பொம்மைகளைப் பரிசளித்துக் கொண்டு பின்பு பிரிந்து, மறுபடியும் ஒன்று சேர்வதாய் கதை. ஒரு அபூர்வமான நோயை மையமாக வைத்து நாவலைப் பின்ன முயற்சித்திருக்கிறார் ஆசிரியை. மிகச் சரளமான நடை. அதுதான் இந்த நாவலைப் படிக்க வைக்கிறது.