/ மருத்துவம் / கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை
அடுத்த ஆண்டு, 150வது பிறந்த நாளை கொண்டாடும் சிறப்பிற்குரிய மருத்துவமனையின் சேவைகளைச் சொல்கிறது இந்நுால். கிழக்கிந்திய கம்பெனியின் துவக்க கால தொடர்புகளை கூறும் இந்நுால் வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப்பட்டதன்று; தாம் கண்டதையும், கேட்டதையும், உற்றதையும் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது.மருத்துவமனையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், சிகிச்சை முறைகளையும் விளக்கும் இந்நுால், இன்றைய மாணவர்களுக்கு சிறந்த வரலாற்றுப் படிப்பினையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.