/ கவிதைகள் / மண் மக்கள் மன்னன்
மண் மக்கள் மன்னன்
கம்ப ராமாயணத்தை நவீன கவிதை வழியாக உரைக்கும் நுால். இளைஞர்களை கவரும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. கம்ப ராமாயண செய்யுள்களை சுலபமாக வாசிக்கும் வகையில் கவிதை வடிவில் கவரும் விதமாக முன்வைக்கிறது. பாயிரம், ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம், அரசியற் படலங்கள் இதில் அடங்கியுள்ளன. கற்பனை கலந்து மூலக் கருத்தை மாற்றாமல் உருவாக்கப்பட்டுள்ளது. மன்னராட்சி கால வாழ்க்கை நடைமுறையை விவரிக்கிறது. ஆன்மிக நம்பிக்கை என்பதை தாண்டி பழங்கலாசாரத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது. பழங்காலத்தில் வாழ்ந்த மக்களை பற்றி விரிவான தகவல்களை தருகிறது. பெருங்காவியத்தை எளிதாக புரியும் வகையில் இலக்கிய சுவையுடன் தருகிறது. கவிதை விரும்பிகளுக்கு விருந்தாக அமையும் நுால். – ராம்




