/ கதைகள் / கிருதுமால் நன்செய்

₹ 150

வாழ்க்கையை உளவியல் பார்வையுடன் அணுகும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அழுக்கு உடலுடன் யாசகம் வாங்கும் சன்னியாசி, அந்த பணத்தை ஏழைகளின் கல்விக்காக அர்ப்பணிப்பவரிடம் கொடுக்கும் அறச்செயலை வெளிப்படுத்தும், ‘சில்லறை காசுகள்’ கதை மனதை ஈரமாக்குகிறது. மாடு வளர்த்து முன்னேற முயலும் ஏழைகளின் பொருளாதார சிக்கல்களை, ‘தொற்று’ கதை கனத்துடன் பகிர்கிறது. கதை மாந்தர்கள் குடும்பமாக உறவுகளாக இருப்பதால் உணர்வு கலந்துள்ளது. ஏழைகளின் விடாப்பிடி உழைப்பும், நேயமும் அறவாழ்வை எடுத்துரைக்கிறது. பெண்களின் உழைப்பும், குடும்பத்தை வழிநடத்துவதும், சமூகத்தை பாதுகாக்கும் அரணாக இருப்பது பற்றி கதைகள் கூறுகின்றன. மதுரை வட்டார மொழியில் உணர்வு கலந்து படைக்கப்பட்டுள்ள நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை