/ சட்டம் / சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்
சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்
பொதுநல வழக்குகளில் சட்டப் பிரச்னை தொடர்பான தகவல்களை தொகுத்திருக்கும் நுால். குற்றவியல் சட்டம், குற்ற விசாரணை முறை சட்ட பிரிவுகளில் தாக்கல் செய்யும் மனுக்கள், சாட்சிய சட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறது. குற்றத்தில் சட்ட தீர்வுக்கு பொருத்தமாக வழக்கை கட்டமைப்பதை முன் வைக்கிறது. வழக்குக்கு ஏற்ப மனு வடிவமைக்கும் உத்தியை கற்பிக்கிறது. போலிப் பத்திரப்பதிவை எதிர்த்து கிரிமினல் நடவடிக்கை நடைமுறையை கூறுகிறது. மனித உரிமை பாதுகாப்பு சட்ட விதிகளை அறியச் செய்கிறது. இலவச சட்ட உதவி மனு எழுதுவதில் உதவுகிறது. சாமானியரும், நீதிமன்றங்களை அணுகி சட்டத்தீர்வு பெற நம்பிக்கை ஊட்டும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு