/ கதைகள் / கிழிக்கப்படாத கடிதங்கள்

₹ 90

சமூகத்தின் இன்றைய சூழலை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் எட்டு கதைகள் உள்ளன. தந்தைக்காக கணவனிடம் உதவி கேட்கும் போது, கிடைக்கும் பதிலை எதிர்கொண்ட விதத்தை, ‘தங்கச்சங்கிலி’ கதை எடுத்துரைக்கிறது. உறவில் ஏற்படும் சிக்கல்களை பேசுகிறது. எழுத்தாளராக துடிப்பவரின் ஆர்வத்தை வெளிப்படுத்தும், ‘அறிமுகம்’ கதை நேர்த்தியாக உள்ளது. அடுக்கு மாடியில் இருந்து தவறி விழுந்து பலியாகும் பெண் குறித்து விவாதிக்கும், ‘மனச்சிறை’ கதை வியப்பூட்டுகிறது. கணவருடன் ஏற்பட்ட சிறு மனக்கசப்பால், பிரிந்து சென்ற மனைவி துடிப்பதை, ‘அவர் வருவாரா’ உணர்வுபூர்வமாக சொல்கிறது. இன்றைய நடப்புகளை முன் வைத்து படைக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ