/ ஆன்மிகம் / கிருஷ்ணரின் நினைவில்...
கிருஷ்ணரின் நினைவில்...
கிருஷ்ணரின் பக்தி, பிரேமையை மனதில் பதிக்கும் நுால். கிருஷ்ண பக்தி, ஜபம், பிரேமை, குரு பக்தி, மனித வாழ்வு, சமுதாயம் பற்றி பக்தி இயக்கமான இஸ்கான் வழியில் நின்று விளக்கப்பட்டுள்ளது. பாடல், ஆடலுடன் மெய்மறந்து நிற்கும் சைதன்ய மகாபிரபு, உலக கிருஷ்ண பக்தி இயக்கத் தலைவர் வழிகாட்டுதலுடன் உள்ளது. ஆழ்வார் பாசுரங்கள், பகவத் கீதை, பாகவதம் எடுத்தாளப்பட்டுள்ளன. அழகிய படங்கள் கண்ணைக் கவர்கின்றன. ஜபம் என்ற தலைப்பில் மனதை ஒருமுகப்படுத்தல், நாம ஜபம் ஜெபித்தல் பற்றி கூறப்பட்டுள்ளது. மனம் என்ற தலைப்பில் அழுக்கு நீக்கல், வேகம் குறைத்தல், நிலை நிறுத்தல், வழி நடத்தல், கட்டுப்பாடு பற்றியுள்ளது. வாழ்வை இனிதாக்க வழி சொல்லும் நுால். –- முனைவர் மா.கி.ரமணன்