/ கதைகள் / கிருஷ்ணவேணி

₹ 90

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பாபநாசம், பாணதீர்த்த அருவிகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவை. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்தானே! வருடம் முழுதும் தண்ணீர் கொட்டும் வற்றாத அருவியான பாபநாசம் அருவியில், அழகும் ஆபத்தும் கலந்தே இருப்பது இந்த உண்மைக் கதையைப் படித்தால் உங்களுக்குப் புரியும். இயற்கை அழகை ரசிக்க வரும் இளைஞர்கள், இளமைக்கே உரிய துணிச்சல் கொண்டு அருவியோடு விளையாடும்போது, எதிர்பாராத விதமாக தங்கள் இன்னுயிரையும் இழக்க நேரிடுகிறது. அப்படி ஒருவர்தான் இந்தப் படைப்பின் நாயகி கிருஷ்ணவேணி. ஆனால், இன்றளவும் அந்தப் பகுதியில் பேசப்படும் செவிவழிக் கதைகள் வாயிலாக, கிருஷ்ணவேணி ஒரு கடவுளாக ஒரு சிலரால் சித்தரிக்கப் படுகிறாள். அது எப்படி? ஏன்?_ சுவாரசியமான இந்த நூல், உங்களுக்கு அந்த விவரங்களைச் சொல்லும். நூலாசிரியர் பா.ராஜநாராயணன், இளமைப் பருவம் முதலே அந்தப் பகுதிகளில் வளர்ந்தவர் என்பதால், மண்ணின் வாசனையோடு அழகாக இந்த நிஜக் கதையைப் பதிவு செய்துள்ளார். சுவைகூட்ட அங்கங்கே கற்பனையும் கலந்தே கொடுத்துள்ளார்.ஆனந்த விகடனில் தொடராக வெளியாகி வாசகரின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பன்மடங்கு அதிகரித்த ‘கிருஷ்ணவேணி’, இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது _ அதே விறுவிறுப்போடும் சுவாரஸ்யத்தோடும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை