/ ஆன்மிகம் / குமரி அன்னை அந்தாதி
குமரி அன்னை அந்தாதி
அந்தாதி என்பது ஆண்டுகள் பழமையான இலக்கணம். கவிதையின் கடைசி வரியை அந்தம் எனக் கொண்டு, அடுத்த கவிதையில் முதல் அடியாக ஆரம்பிக்கும் முறை. அந்த இலக்கண விதி வழு மாறாமல், கட்டளைக் கலித்துறை இலக்கணத்தில் நான்கு வரிகளாக இயற்றி உள்ளார். இலக்கிய புலமை மிளிர்கிறது.ஒரு பாடல் பாண்டியர் எனத் துவங்கி, சோழர், சேரர் என மூவேந்தருக்கும் சொந்தமாக இலங்கும் கன்னியாகுமரி தாயைப் போற்றுகிறார். ஆழ்ந்து சிந்தித்து அர்த்தம் விளங்கி படிக்க வேண்டிய கவிதைகள். – சுப வெங்க்