/ கதைகள் / குறள் கதை அமுது

₹ 240

திருக்குறள் பாக்களின் மையக்கருத்து அடிப்படையில் அமைந்த சிறுகதை தொகுப்பு நுால். பளிச்சென்று மனதில் பதியும் வண்ணம் உள்ள புராண, இதிகாச, சமுதாய நிகழ்வுகள் அடிப்படையில் சிறுகதைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அழகிய படங்களுடன் தரப்பட்டுள்ளது. இறையடி சேர்ந்தால் பிறப்பு இல்லை போன்ற எளிய வரிகளில் ஆழ்கடல் காட்டப்பட்டுள்ளது. பொறுமைக்கும் பொறாமைக்கும் உள்ள வித்தியாசம் காலத்தால் நிலைக்கும் வகையில் தரப்பட்டுள்ளது. காலம் அறிந்து செயலாற்ற வேண்டும் என்பதை மகேந்திர பல்லவனின் ராஜ தந்திரத்தை முன்வைத்து புரிய வைக்கிறது. இது போல் 108 சிறுகதைகள், திருக்குறளை அடிப்படையாக கொண்டுள்ளன. நல்ல வழியில் வரும் செல்வம் மேன்மை தரும் என்றுரைக்கும் நுால். – சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை