/ கதைகள் / குற்றப்பொய்கை
குற்றப்பொய்கை
தொழிலதிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதை போலீசார் துப்பறியும் விதமாக அமைந்துள்ள நாவல்.துவக்கத்தில் தொழிலதிபர் கொல்லப்பட்டு கிடப்பதை, கார் ஓட்டுனரான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் பார்க்கிறான். தகவல் அறிந்து வந்த போலீசார், அவனிடம் இருந்து விசாரணையை துவக்குகின்றனர். முதலில் சினிமா நடிகை மீது சந்தேகம் வர, கண்காணித்து விசாரிக்கின்றனர். அவர் முன்னணி நடிகரிடம் தஞ்சமடைய, அடுத்த கோணத்தில் விசாரிக்க ஆரம்பிக் கின்றனர். அதற்கும் பலனின்றி போகிறது. இறுதியில், நடிகர் கூறும் தகவலை வைத்து, குற்றவாளியை நெருங்குகின்றனர். இறுதியில் குற்றவாளி சிக்குகிறான். திருப்பங்களைக் கொண்டதாக, படிக்கத் துாண்டும்படி அமைந்துள்ள நாவல்.– முகில் குமரன்