லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2025
குலதெய்வத்தின் மேன்மை, சிறப்புகளை போற்றும் வகையில் ஆன்மிக படைப்புகளை மையமாக வைத்து லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகதை மற்றும் கவிதைகளுடன் கலகலக்கிறது. குலதெய்வ வழிபாடு தோற்றம் குறித்த ஆராய்ச்சி, புதிய தகவல்களை உடையது. குலதெய்வத்தை ஏன், எப்படி வணங்க வேண்டும் என்ற கேள்விக்கு தெளிவான விடை தரப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கட்டுரையும் வித்தியாசமானது. பக்தி உணர்வை ஊட்டும் வகையில் அமைந்துள்ள ‘மீன் குளத்துக் காவு பகவதி’ உள்ளிட்ட கட்டுரைகள் சிறப்பு. படைப்பாளர்களின், 50க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. அருள்மழை பொழியும் காசி விசாலாட்சி, பழனி பாலதண்டாயுதபாணி என சுவாமிகளின் வண்ணமயமான ஓவியங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. நல்ல எண்ணத்தை மேம்படுத்தும் வகையில், தக்க படைப்புகளுடன் மலர்ந்துள்ளது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர். – சிவா