/ வரலாறு / கடைசிக் கோடு
கடைசிக் கோடு
இந்திய வரைபட வரலாற்றை கதை போல் விவரிக்கும் நுால். ராணுவம், அரசியல், கல்வி, வணிகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை களில் மிகவும் முக்கியமான நாட்டின் வரைபடம் உருவாக்கப் பட்டதை தெளிவாக விவரிக்கிறது. கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளுக்கு மேல் நடந்த பணிகள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த பணியின் பின்னணியில் இருந்த உழைப்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்திய நிலப்பரப்பில் ஆய்வு செய்து, காடு, மலை, சமவெளி என பயணம் செய்து உருவாக்கப்பட்டதை சுவாரசியம் குன்றாமல் தருகிறது. கற்பனைக்கெட்டாத வகையில் நடந்த செயல்பாடுகள், அதன் முக்கியத்துவம், எதிர்கொண்ட பிரச்னைகள் என பல தகவல்கள் உள்ளன. அறிய வேண்டிய முக்கிய நுால். – மதி




