/ சட்டம் / சிவில் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்
சிவில் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்
நடைமுறையில் உள்ள சிவில் சட்டங்களை விரிவாக எடுத்துரைக்கும் நுால். நம் நாட்டின் பல வகை நீதிமன்றங்களையும், அவற்றில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளையும் தெளிவாக்குகிறது. வழக்குகளின் வகைகள், வாதி, பிரதிவாதி, சம்மன் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் தெரிவிக்கிறது. பிரதிவாதி வாக்குமூலத்தை நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ வழங்கலாம் என கூறுகிறது. ஒருவரின் இழப்பை ஈடுகட்டும் வகையில் வழங்கப்படும் தீர்ப்புகள் குறித்தும் விளக்குகிறது. உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும் சிவில் சட்ட நடைமுறைக்கு முன்னோடியான ஸ்மிருதிகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் புரிந்து கொள்ள உதவும் சட்ட விளக்க நுால். – முகிலை ராசபாண்டியன்




