/ பெண்கள் / ஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள்

₹ 145

காலத்துக்கு ஏற்ப தையல் தொழில் செய்ய வழிகாட்டும் நுால். ஆண் – பெண் இருபாலரும் செய்யக்கூடிய வகையில் உள்ளது. இன்றைய நாகரிகத்துக்கு ஏற்ப, எப்படி தைக்க வேண்டும் என்பதை பக்கத்துக்கு பக்கம் புரியும்படி விளக்குகிறது. வழிகாட்டும் படங்களுடன் வெளி வந்திருக்கிறது. பேஷன் மாறிக்கொண்டே தான் இருக்கும்; அதற்கேற்ப வடிவமைப்பு உத்தியை மாற்றும் திறன் அவசியம் என்கிறது. பாவாடை, தாவணி, ரவிக்கை என்ற பேஷன் தேய்ந்துவிட்டதையும், காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பில் மாற்றங்களையும் சொல்கிறது. உடல் உயரம், பருமனுக்கு ஏற்ப வடிவமைப்பை அமைக்கும் விதம் சொல்லப்பட்டுள்ளது. தையல் தொழில் செய்ய வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை