/ இசை / பள்ளிக்கூடம் போகலாம் வாங்க

₹ 230

சமூக நோக்கில் எழுதப்பட்ட குறுநாடகங்களின் தொகுப்பு நுால். இளைஞர்களுக்கு பயன் தரும் கதைக்களங்களை கொண்டுள்ளன. மகளிர் கல்வி, சமூக நலம், சுற்றுச்சூழல் துாய்மை போன்ற பொருண்மைகளை சுற்றி அமைந்து விழிப்புணர்வு தருகின்றன. சமயச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் திருஞானசம்பந்தர், மெய்ப்பொருள் நாயனார் பெருமை போற்றும் நாடகங்களும் உள்ளன. புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பரசுராமன் நாடகமும், முருகனருள் உணர்த்தும் நாடகமும் எளிய மொழி நடையில் அமைந்துள்ளன. தகுந்த இடச்சூழல்களோடு காட்சிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. தற்கால பேச்சு நடையில் அமைந்துள்ளன. அளவோடு நகைச்சுவையும், நையாண்டியும் கலந்துள்ளது. சுவாரசியமாக வாசிக்க உகந்த நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ