மதுராபுரி
மன்னர் திருமலை நாயக்கர் வரலாற்றை கதைக்களமாக கொண்டு இந்திரனின் அழகாபுரியை மதுரையில் உருவாக்கிய நிகழ்வுகளை, ‘மதுராபுரி’ என்ற சரித்திர நாவல் மூலம் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் நாவலாசிரியர் கேசவநாராயணன்.‘இரண்டு குதிரைகள் பூட்டிய ரதம் திருவண்ணாமலை தாண்டி வேலுார் செல்லும் பாதையில் நிதானமாக பயணித்து கொண்டிருந்தது’ என்ற தகவலுடன் ஆரம்பமாகிறது மதுராபுரி. தொடர்ந்து பக்கங்களில் பயணிக்கும் நம் கண்கள் மன்னர் தேசத்திற்கே சென்று விடுகிறது.திருமலை மன்னரிடம் அரசிகள் இருவரும் மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தில் அஷ்ட சக்தி மண்டபம் அமைத்து தரும்படி கேட்க, அதற்கு மன்னர், ‘நீங்களே முன் நின்று அந்த திருப்பணியை செய்யுங்கள்’ என கூறியது போன்ற அரிய தகவல்கள் பல நாவலில் இடம்பெற்றுள்ளன. கதைக்களத்திற்கு ஏற்ப வரையப்பட்ட ‘அனிமேஷன்’ படங்கள் நம் கண்களை கவர்கின்றன.– ஸ்ரீனி




