/ ஆன்மிகம் / மதுரை வரலாறும் மீனாட்சி மகிமைகளும்

₹ 320

மதுரை நகரின் வரலாறு, மீனாட்சியம்மன் கோவில் தனிச்சிறப்புகளை எடுத்துரைக்கும் நுால். எளிய நடையில் சுவாரசியம் குன்றாமல் தகுந்த ஆதாரங்களுடன் தகவல்கள் உள்ளன. தொன்மை சிறப்பு என்பதில் துவங்கி, எப்போதும் திருவிழா கொண்டாட்டம் வரை, 34 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. தென்மதுரை, கபாடபுரம் நகரங்கள் கடல்கோள்களால் அழிந்து, இன்றைய மதுரை உருவானதாக வரலாற்றுடன் துவங்குகிறது. இலக்கியம், கல்வெட்டு, வெளிநாட்டு பயணியர் குறிப்புகள் வழியாக மதுரை பற்றிய செய்திகளை கண்டறிந்து தரப்பட்டுள்ளது. மதுரை என்ற பெயர் குறித்த தொன்மை செய்திகள் வியப்பு ஏற்படுத்துகின்றன. இலக்கியங்களில் பல்வேறு பெயரில் வழங்குவதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில், மீனாட்சியம்மன் கோவில் வளர்ச்சியடைந்ததை ஆதாரங்களுடன் முன்வைக்கிறது. அன்னிய படைகளால் மதுரை சூறையாடப்பட்ட செய்திகள் சிலிர்க்க வைக்கின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் ஏற்பட்ட மாற்றங்களை அறியத்தருகிறது. மதுரை தெரு பெயர் பின்னணி, ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரை நிலை என தொகுத்து தரப்பட்டுள்ளன. மதுரை கோவில் நுழைவு செய்திகளும் தரப்பட்டுள்ளன. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள், விமானங்கள் பற்றிய செய்திகளுடன் உள்ளது. கோவிலில் திருமேனிகளுக்கு அணிவிக்கப்படும் நகை விபரம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. மதுரை நகர வரலாற்று சிறப்புகள், மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய விரிவான செய்திகளுடன் அமைந்த நுால். – ராம்


வாசகர்கள் கருத்துகள் (1)

N Naganathan
ஆக 10, 2026 06:02 AM

What is the price of the book?... Who wrote it? Amudhan!?


முக்கிய வீடியோ