/ ஆன்மிகம் / மகா பெரியவா (பாகம் – 7)

₹ 220

கலியுகத்தில் தெய்வத்தை காண்பது அரிது. ஆனால், தெய்வம் தன் கடமையை செய்யாமல் இருப்பதில்லை. தன் வடிவில் மகான்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறது. அவ்வாறாக வந்தவர் தான் காஞ்சி மகா பெரியவர். நுாறாண்டுகள் வாழ்ந்த இந்த நடமாடும் தெய்வம் செய்த அற்புதங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றில் சிலவற்றை தொகுத்து புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தனை அற்புதங்களும் அருமையானவை, பரவசமூட்டுபவை. உடல் நலக்குறைவால், வாழ்வின் விளிம்புக்கே சென்ற தன் பக்தர்கள் உயிரை காப்பாற்றி தந்தது வரலாறாக அமைந்துள்ளது. நவீன மருத்துவக் கருவிகள் தந்த ஆய்வு அறிக்கைகளை அப்படியே திருப்பிப்போட்டு பக்தர்களை காப்பாற்றியது, தன்னிடம், ‘திரும்பி போ...’ என்று சொன்ன நாத்திகர்களுக்கு கூட அருள் செய்த நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. மகன் இறந்து விட்டான் என நினைத்து திதி கொடுத்த வேளையில் பெற்றோர் மனம் மகிழும் வகையில் செய்த மாபெரும் அதிசய செயல் இந்த நுாலில் இடம் பெற்றுள்ளது. இது போல் அற்புத தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மத பேதமின்றி நீதிபதிகளை சந்தித்து அவர்களுக்கும் தரிசனம் தந்து பிரசாதமும் அருளிய வரலாறு சிறப்பானது. அதை படிக்கும்போது நம்மையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பம்சம். பக்தி என்ற தேனை பருகி பரவசம் அடைய இல்லங்களில் இந்த புத்த கம் இருக்கட்டும். – தி.செல்லப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை