/ ஆன்மிகம் / மகாபாரதம் அறத்தின் குரல்
மகாபாரதம் அறத்தின் குரல்
மகாபாரதம் கிளைக் கதைகளோடு உள்ளடக்கி வெளிவந்துள்ள உரைநடை நுால். கிளைக்கதை நிகழ்வுகளில் தர்மம், அதர்மங்களை எடுத்துக் காட்டுகிறது. மகாபாரதப் போரை முன்னிறுத்தும் இதிகாசத்தில், ஒவ்வொரு பருவத்திலும் வரும் கதைகள் தொடர்ச்சியோடு நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளன. முக்கிய கதை நாயகர்களான திருதராட்டினன், பாண்டு, விதுரன், கர்ணன் பிறப்பை அறிய வைக்கிறது. போர்க்களத்தில் கண்ணன் வழி நடத்துவதும், கர்ணன் மரணிப்பதும், களச்சூழலும் தெளிவுபட தரப்பட்டுள்ளன. போர்க்களக் காட்சியில் நடக்கும் அழிவுகளும், முடிவுகளும் சிறு சிறு தலைப்புகளில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. மகாபாரதக் கதையை முழுமையாக அறிய வைக்கும் நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு