/ வாழ்க்கை வரலாறு / மகாதேவ தேசாய்
மகாதேவ தேசாய்
காந்திஜியின் நிழலாக தொடர்ந்து வாழ்க்கையை பதிவு செய்தவரின் செயல்பாடுகளை காட்டும் நுால். காந்திஜியின் செயல்பாட்டை விரும்பி அவருடன் சேர்ந்தவர் மகாதேவ தேசாய். செயலராக இணைந்து, நிழலாக தொடர்ந்து அன்றாட செயல்பாடுகளை பதிவு செய்தவரின் வாழ்க்கையை விரிவாக அறியத் தருகிறது இந்த புத்தகம்.தொடர் செயல்பாடுகளால் உலகில் பெரும் புகழ் பெற்றவர் காந்திஜி. இந்த நுாலும், அவரது பயண வழியை ஒட்டிய நடைமுறையை பதிவு செய்கிறது. காந்திஜியின் முக்கிய செயல்பாடுகளை உடனிருந்து கவனித்தவர் செயலை அற்புதமாக படம் பிடிக்கிறது. தியாகத்தின் திருவுருவை நிழல் போல் தொடர்ந்தவரின் வாழ்க்கை வரலாற்று நுால்.– மதி