/ வாழ்க்கை வரலாறு / மகாகவி பாரதியார் (ஆங்கிலம்)

₹ 50

பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தரும் ஆங்கில நுால். எட்டயபுரத்தில் பிறப்பு முதல் திருவல்லிக்கேணி மறைவு வரை ஒவ்வொரு நிகழ்வும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நுால்களைப் படிப்பது, பாடல்களை புனைவதில் பாரதியாருக்கு இருந்த ஆர்வம், பாரதியாரின் திருமணம், காசி பயண நிகழ்வு, மீண்டும் எட்டயபுரம் வந்து தமிழாசிரியராகப் பணியாற்றியது பற்றி சுருக்கமாக தரப்பட்டுள்ளது.சென்னையில் அரசியலில் ஈடுபட்டது, மண்டையம் சீனிவாச ஐயர் துவங்கிய, ‘இந்தியா’ வார இதழில் பணியாற்றியது, திலகரின் போராட்டங்களுக்கு ஆதரவளித்தது அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரவிந்தர் எழுதிய கர்மயோகியை மொழிபெயர்த்தது பற்றிய விபரங்கள் உள்ளன. பாரதியின் வாழ்க்கை நுால். --–- புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை