/ பொது / மகாமுனி திரைக்கதை
மகாமுனி திரைக்கதை
நடிகர் ஆர்யா, இரு கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி. சமகால அரசியல், ஜாதி, வன்முறையால் சராசரி மனிதன் எவ்வளவு துயரங்களை சந்திக்கிறான் என்பதை, இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவில் விளக்குகிறது இந்நுால். வெவ்வேறு நிலப்பரப்பில், வெவ்வேறு வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்பின் அறியாத இரண்டு பேர், தாம் இரட்டையர்கள் என்பதை உணர வைக்க, சமுதாய அழுக்குகளில் இருந்து எடுத்துள்ள விதம், ஆசிரியரின் புதுமையை காட்டுகிறது. திரைமொழியில், இலக்கியத்தை உருவாக்க முடியும் என்பதை படிக்கும் போது உணர முடியும். சமூக அவலங்களை கூறும் இது போன்ற பல வசனங்கள், இந்நுாலில் இடம் பெற்றுள்ளன. சமூக சிந்தனை கொண்ட திரைப்படம் எடுக்க துடிப்பவர்கள் படிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்