/ ஆன்மிகம் / மஹாபெரியவா பாமாலை
மஹாபெரியவா பாமாலை
காஞ்சி மகா சுவாமிகள் புகழ் பாடும், பாமாலைகளின் தொகுப்பு நுால். ராக, தாளத்தோடு படைக்கப்பட்ட கீர்த்தனைகள், உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. மகா பெரியவர் மகிமை, பெருமைகளை பாடல்கள் உணர்த்துகின்றன. மனித நேயத்தை காக்க ஆற்றிய தொண்டுகளை போற்றும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. தொகுப் பில், ‘மகா பெரியவா பாதம்’ என்ற தலைப்பில் துவங்கி, ‘திங்களை முடி மேல்’ வரை, 108 பாமாலைகள் உள்ளன. இனிய இசைக்கு உகந்த பாடல்கள், கல் மனதையும் கரைக்கும் வகையில் உள்ளன. கருத்தும், பக்தி உணர்வும் ததும்புகிறது. கவிதை சுவை பெருக்கெடுக்கிறது. மகா சுவாமியின் பெருமை உணர்ந்து, அனுபவமாக அகம் மகிழ ஏற்றதாக உள்ளது. காஞ்சி மகா சுவாமிகள் புகழ் பாடும் பாமாலைகளின் தொகுப்பு நுால். – சிவா




