/ ஆன்மிகம் / மகரஜோதி (பாகம் – 2)

₹ 1,800

மகரஜோதி ஹரிஹரபுத்ர சகஸ்ர நாமாவளிக்கும், ஸ்ரீதர்மசாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளிக்கும் விளக்க உரை அளித்துள்ள நுால். தர்மசாஸ்தாவின் குணங்களும், பிறப்பற்றவர் என்ற தகவல்களும் உள்ளன. பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டியதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் பாசண்ட சாத்தனைப் பற்றிய செய்திகள் ஆர்வத்தைத் துாண்டும். சரணடைந்தவர்களை சாஸ்தா காப்பாற்றுகிறார். இந்திரன் மனைவி சசியை காப்பாற்றியது, அரசர் ஒருவருக்காக யக் ஷிக்கு விலங்கு பூட்டியது போன்ற செய்திகள் ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன. சாஸ்தா நோய் தீர்ப்பவராக, விஷம் அகற்றுபவராக, தடைகளை நீக்குபவராக, விலங்குகளிடம் பேரன்பு காட்டுபவராக விளங்குவதை குறிப்பிடும் நுால்.– முகில்குமரன்


புதிய வீடியோ