/ மாணவருக்காக / மாணவர் மாண்புகள்

₹ 270

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் பட்டியலிட்ட 83 வகை மாணவர் மாண்புகளை எளிய நடையில் தரும் நுால். புலனடக்கம், குடிமைப் பயிற்சி, கூட்டுறவு மனப்பான்மை, ஒழுக்கமுடைமை, கடமையுணர்வு, பொதுநல நோக்கு, மனிதநேயம், ஒருமைப்பாடு உள்ளிட்டவற்றை கற்பிக்கும் பணியை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டியதை பதிவு செய்துள்ளது. பள்ளிப் பருவத்தில் துவங்கி, தனிநபர் மாண்பு குன்றாமல் இலக்கை நோக்கி நகர்வதற்கான தேவைகளை காட்டுகிறது. சமூகத்தில் சகிப்புத்தன்மை, குற்றச்செயல்கள், ஜாதிப் பாகுபாடுகள் பெருகுவதைச் சுட்டி, சமச்சீரான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை