/ கதைகள் / மனங்களே மலருங்கள்!

₹ 60

சிக்கல்களை சமாளிக்கும் வகையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். அடம் பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்பது என்பதை பக்குவமாக எடுத்து கூறுகிறது. முரண்டு பிடித்தவளை சாமர்த்தியமாக சமாளித்த விதத்தை விவரிக்கிறது. இறுதியில் பெண் கேட்கும் விதம் சூப்பரான முடிவு. மலர்களின் மதிப்பு நிரந்தரமானது என எடுத்துரைக்கிறது, ‘நிஜப்பூக்கள்’ சிறுகதை. கொள்ளையடித்தவனை கனிவுடன் கவனமாக கையாண்டு திருத்திய பாட்டி பற்றிய கதை பெருமை சேர்க்கிறது. இக்காலத்திலும் இப்படியும் சிலர் இருப்பதை காட்டுகிறது. அலைபேசியை எச்சரிக்கையாக கையாள வேண்டியதன் அவசியத்தை, ‘எச்சரிக்கை மணி’ கதை சொல்கிறது. சிறு அலட்சியம், பேராபத்தாகிவிடும் என்கிறது. சிக்கல் தீர்க்கும் சிறுகதை நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை