/ வாழ்க்கை வரலாறு / மாணிக்கவாசகர்

₹ 180

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று நுால். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசியர் – சிவஞானவதியின் மகனாக அவதரித்தார் மாணிக்க வாசகர். இவரது நற்குணங்கள், செயலாற்றல், எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் பாங்கு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அரண்மனையில் முதலமைச்சர் பதவி வகித்தது, குதிரை வாங்க சோழநாடு சென்ற நிகழ்வுகளை குறிப்பிடுகிறது. திருப்பெருந்துறையில் தீட்சை பெற்றதும் நடந்த மாற்றங்களை குறிப்பிடுகிறது. மன்னருக்காக குதிரை வாங்க வந்த பணத்தில் சிவன் கோவில் அமைத்தது விவரிக்கப்பட்டுள்ளது. திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி பாடிய சூழல், புத்த சமயத்தவரை வாதத்தில் வென்ற நிகழ்வுகள் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன. சைவ அன்பர்களுக்கு உவப்பான நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை