/ அரசியல் / மாநிலச் சுயாட்சியும் கூட்டாச்சித் தத்துவமும்
மாநிலச் சுயாட்சியும் கூட்டாச்சித் தத்துவமும்
அதிகாரம் பரவலாக்கப்பட்டால், மாநிலம் தனித்தன்மையுடன் வளர்ச்சி அடையும் என்பதை கூறும் நுால். மாநில சுயாட்சி, மொழி வளர்ச்சி குறித்து விளக்குகிறது.இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு, சட்ட வரைவுக்குழு, அதன் முக்கிய கூறுகள் குறித்து எளிமையாக புரிய வைக்கிறது. அமைச்சர் முதல் தலைமை வழக்கறிஞர் வரை நியமனம் குறித்த விபரங்களை எடுத்துரைக்கிறது.லோக்சபாவில் மசோதா நிறைவேற்றும் நடைமுறை, உச்ச நீதிமன்ற அதிகாரம், நீதிபதிகள் நியமனம், மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை கூறும் சட்டப்பிரிவுகள் குறித்து விளக்குகிறது. அரசியல் அமைப்பில் மாநில பங்கு குறித்து விளக்கும் எளிய நடையிலான நுால்.– டி.எஸ்.ராயன்