/ வாழ்க்கை வரலாறு / மணிப்பூர் போராளி ஐரோம் சர்மிளா
மணிப்பூர் போராளி ஐரோம் சர்மிளா
மணிப்பூர் மாநிலத்தில் அதிகார சட்டத்தை எதிர்த்து போராடிய சர்மிளாவின் வாழ்க்கை வரலாற்று நுால். வாழ்வில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டிய துணிச்சலை விவரிக்கிறது. ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கியோர் நிலை பற்றி கூறப்பட்டுள்ளது. மணிப்பூர் பெண்கள் கொதிப்படைந்து, உச்சபட்சமாக நிர்வாணமாக போராட்டம் நடத்தியதை விவரிக்கிறது. வன்முறை சம்பவங்களை சித்தரித்து நாடகம் நடத்தியதையும் குறிப்பிடுகிறது. மணிப்பூரில் மனித உரிமையை நிலைநாட்டியதை பாராட்டி ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய, சர்வதேச விருதுகள் குறித்த தகவல்கள் உள்ளன. மனித உரிமை காக்க போராடியதை கூறும் நுால். – புலவர் சு.மதியழகன்




