/ பொது / மறக்க முடியுமா! – பாகம் 2
மறக்க முடியுமா! – பாகம் 2
தமிழ் திரையுலகின் பாரம்பரிய திரைப்படங்களை, அதன் கலாசார தாக்கங்களை வரலாற்று ரீதியாக பதிவு செய்துள்ள நுால். திரைப்படங்கள் உரிய பின்னணியுடன் விவரிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் பற்றிய வரலாற்று புரிதலை வெளிப்படுத்துகிறது. நெஞ்சில் நிற்கும் படங்கள், தமிழ் சினிமாவின் தொன்மையை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக உள்ளது. திரைப்பட விமர்சனம், வரலாறு, தயாரிப்பு சிக்கல் கள், இயக்குநர்களின் பார்வை ஒருங்கிணைக்கப்பட்ட விதம், உணர்வை துாண்டும் உரையாடல்கள் சிறப்பாக உள்ளன. தமிழ் சினிமா உலகின் மாபெரும் தருணங்களை நினைவூட்டும் அரிய ஆவணம். சினிமாவை ரசிக்கவும், புரிந்து கொள்ளவும் உதவும் நுால். –- இளங்கோவன்