/ வாழ்க்கை வரலாறு / மறக்கவியலா மாணவப் பருவம்!
மறக்கவியலா மாணவப் பருவம்!
இளமைப் பருவ நினைவுகளின் சுயசரிதை நுால். துவக்கப்பள்ளி காலத்தில் விறகு வெட்டி விற்று, சோளம், கேழ்வரகு வாங்கி பசி போக்கியதை கூறுகிறது. சுற்றுலா நினைவுகளை முன்வைக்கிறது. வறுமையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் கிடைத்த பலனை பகிர்கிறது. விடுமுறை நாளில் நினைவலை தொகுப்பு நுால் தயாரித்தது கூறப்பட்டுள்ளது. தனித்திறமையை குறிக்கோளாக மாற்ற துவங்கியதை குறிப்பிடுகிறது. வாசகசாலைக்கு சைக்கிளில் சென்றபோது அபராதம் விதித்ததை பகிர்கிறது. சுவாரசியம் குன்றாத சுயசரிதை நுால். – டி.எஸ்.ராயன்




