/ கவிதைகள் / மரபுக் கவிதை மலர்கள்
மரபுக் கவிதை மலர்கள்
புதுக்கவிதை தோற்றம் கொண்டவுடன் மரபுக்கவிதை விடைபெற்றுக் கொண்டது என்று உரைப்பவருக்கு, ‘இன்னும் இருக்கிறது, சுவை நலம் கெடாமல், சான்றோர் களிக்க’ என்று கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். எளிய சொற்களால் படிப்பவரை இனிமைக்குள் ஆழ்த்துகிறது. விநாயகர், வாணி, வேலவன் என கடவுள்களை போற்றிய கவிதைகளில் துவங்குகிறது. குரு, அரசர்என பொது தலைப்புகளை வரிசை முறையில் அமைத்து அழகு கூட்டுகிறது. முக்கிய விழாக்கள், செய்தித்தாள்கள் என, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வெண்பாவாய் அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கவிதை மட்டுமல்ல, மரபுக்கவிதையும் எளிமையாக தந்து மனதைக் கவரும் நுால்.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்