/ கதைகள் / மறுபடியும்
மறுபடியும்
கண்ணியமுடன் வாழ எண்ணும் பெண்ணுக்கு ஏற்படும் சிரமங்களை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல்.நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் பெண், மிருக மனம் படைத்தவனை மணக்க நேரிடுகிறது. பெண் குழந்தைக்கு தாயாகிறாள். பொறுமையை கடைப்பிடிக்கிறார். கொடூரம் எல்லை மீற விவாகரத்து பெறுகிறாள். பின் மறுமணத்துக்கு முடிவு செய்கிறாள்.அது சம்பந்தமாக குழந்தையுடன் நடக்கும் உரையாடலுடன் துவங்குகிறது கதை. தேர்ந்த வார்த்தை நயத்துடன் காட்சி பூர்வமாக நகர்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் உரிய தனித்துவம் நிறைந்ததாக படைக்கப்பட்டுள்ளன. இது வாசிப்பில் சுவாரசியத்தை தருகிறது. பெண்ணின் மன உணர்வுகள் மிக நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன. விறுவிறுப்புடன் அமைந்த நாவல் நுால்.– சிவா




