/ கவிதைகள் / மதன விலாசம்

₹ 400

மரபு கவிதையால் பெண்ணின் எழிலை புனைந்து காட்டும் காதல் காவிய நுால். பாமரர் முதல் சாமியார் வரை காமம், காதலை விட்டவரும், வென்றவரும் இல்லை என்கிறது. இந்த காதல் காவியம், சென்னை மெரினா கடற்கரையில் கூடிய மக்கள் மத்தியில் பாடி அரங்கேற்றம் செய்ததை பரவசமாக பதிவு செய்துள்ளது. பிடிக்கமலம் என்ற காதல் தலைவியின் விழியை, இதழை, இடையை தலைவன் வருணிக்கும் அழகு மிக நீளம். அதை விட பாவையின் மார்பு பூங்கொத்து என புராணமாய் நீள்கிறது. கொக்கோடு பேசல், புறாவோடு பேசல், வண்டோடு பேசல், நாரையோடு பேசல், நிலாவோடு பேசல் போன்ற மரபு சார்ந்த தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. மதனனின் விலாசம் தேடி அலைந்து, முடிவில் அதை மங்கையின் மார்பில் கண்டு முடியும் மரபுக்கவிதை நுால். – முனைவர் மா.கி.ரமணன்