/ கவிதைகள் / மதிலைத் துளைத்த துளி

₹ 180

சமூக பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, சிந்தனைகளை விதைக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொருவரும் சக மனிதர்களுடன் ஏற்றத்தாழ்வு இன்றி வாழ்வதே உண்மை அன்பு என உரைக்கிறது. வாழ்வில் முன்னேற கனவு காண வேண்டும்; அதே நேரம் கனவாக வாழ்க்கையை எண்ணக்கூடாது என அறிவூட்டுகிறது. பொய்க்கால் குதிரையில் மெய் பாதையை தேடுவது, பிணத்தின் மீது சந்தனம் மணப்பது போன்ற உவமைகள் நயத்துடன் சொல்லப்பட்டுள்ளன. ‘மாமியார் என்ற உறவு நஞ்சல்ல; மருந்து’ என அறிவுரை கூறுகிறது. தீண்டாமைக்கு எதிரான கருத்துகளை துணிவுடன் முன்வைக்கிறது. வாழ்வை மேம்படுத்தும் வகையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். – சிவா