மீட்சி
8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர்,சென்னை-17. (பக்கம்: 176) ""சக ஜீவிகளின் துயரங்களுக்கும், சந்தோஷங்களுக்கும் நாம் எல்லாரும் கூட்டாக காரணம் என்று படுகிறது. இதன் உணர்த்தலே நம்மை தூய்மைப்படுத்துவதாகத் தோன்றுகிறது. இக்கதைகளை சொற்களில் வடித்து உருவம் கொடுத்த பிறகு, ஒரு ஞானஸ்நானம் கிடைத்தது போல என் மன உளைச்சல் விடுபட்டது, என்று கூறும் வாசந்தியின் கதைப் பின்னலும், சம்பவங்களும், அவர் நிஜ வாழ்வில் சந்தித்தவர்களின் அனுபவ நிகழ்வுகளே என்பதற்கு இச்சிறுகதை தொகுப்பும் ஒரு சான்று.அகதிகள் முகாமில் படும் அவதியை விட, ""சொர்க்கமோ, நரகமோ எங்கட நாடு, எங்கட சனம் என்று ஈழம் திரும்பும் தம்பதிகளை, ""மீட்சியிலும், முதியோர் இல்லத்திலும் நகுமோவில் உருகும் காமாட்சியை, ""வானதி பிரஸ்தம் சிறுகதையிலும், ""மழைநீர் அவள் பாதங்களை மறைத்த சகதியை விலக்கிக் கொண்டிருந்தது, என முடியும், ""மழை சிறுகதையும் இப்படி, 11 சிறுகதைகளும், வாசனை நெகிழச் செய்யும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. தரமான சிறுகதை தொகுப்பு.