/ கதைகள் / மேஜர் ஜீவா

₹ 450

கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கும் ஈகோ முற்றி மோதல் வந்தால் என்ன ஆகும். இருவரும் இளம் பெண் மற்றும் இளமை முறுக்கில் ஆணாகவும் இருந்தால் என்ன நடக்கும். இந்த கதையின் மையக்கரு இது தான்.அநியாயத்தை எதிர்க்கும் ஜீவா. அவன் அதிரடி முடிவுகளை எதிர்க்கும் ஜீவிதா. ஜீவிதா அம்மாவின் பக்குவமான பேச்சும், ஜீவா தகப்பனின் நேர்மைக்கு தலை வணங்கும் பேச்சும், கதையின் போக்கை சுவாரசியம் ஆக்குகிறது. ஊர்வலம் வருவதற்கு காரணம் பிரச்னை தான்; பிரச்னை வருவதற்கு காரணம் இதே ஊர்வலங்கள் தான். வேலை என்பது என்ன... மாசம் முடிஞ்சா சம்பளம் வாங்கணும்; வயசு முடிஞ்சா ரிட்டயர் ஆகணும். இதுக்கு பேர் பிழைப்பு. கெட்டுப்போன மந்திரியின் பிள்ளைகளை பந்தாடி படிப்பினை தரும் நுால்.– சீத்தலைச் சாத்தன்


புதிய வீடியோ