/ பழமொழிகள் / இராணுவப் பழமொழிகள்
இராணுவப் பழமொழிகள்
உலக அளவில் ராணுவ பழமொழிகளை தொகுத்துத் தரும் நுால். தமிழ் மொழியில் உள்ள பழமொழிகளை அகரவரிசையில் தொகுத்துத் தருகிறது. சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளில் இடம்பெற்ற பழமொழிகளும் உள்ளன. ராணுவம் குறித்து வள்ளுவர் தெரிவித்துள்ள கருத்துகள், கன்பூசியஸ், சாணக்கியர் முதுமொழிகளும் தரப்பட்டுள்ளன. அகல இருந்தால் பகையும் உறவாகும், அடிக்கு உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான், எதார்த்தவாதி வெகுஜன விரோதி போன்ற பழமொழிகள் உள்ளன. ஏழை மக்களுக்காக போராடும் வீரன் உடலை கண்ட துண்டமாக வெட்டினாலும் நோக்கத்தைக் கைவிடமாட்டான். இதைப்போல் போர், வீரம் தொடர்பான அறிவுரைகள் உடைய நுால். – முகிலை ராசபாண்டியன்