மின்னற்பா ஆயிரம்
காவ்யா, 16 இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. (பக்கம்: 256) அண்மையில் காலமான தமிழறிஞர் இன்னாசி தமது இறுதிக் காலத்தில் படைத்த புதிய இலக்கியம் இந்த நூல். ஹைக்கூ கவிதைகளுக்கு அவர் இட்ட பெயர் மின்னற் பா என்பது ஆகும். நாட்டுப் புறப் பாடல் வடிவத்திலும், மரபிலும் கவிதை நூல்கள் படைத்துள்ள பேராசிரியர் இன்னாசியின் இந்த நூலில் ஹைக்கூ ஒளி வீசுகிறது. தமது கவிதை பற்றிய தமது திறனாய்வை நூலின் தொடக்கத்தில் அவரே எழுதியிருப்பதால் தமிழ்க் கவிதை வரலாற்றின் அறிமுகம் நமக்குக் கிடைத்துள்ளது. குன்று தோறும் கோவில் குடமுழுக்கை அமைச்சர் செய்தார் கல் ஆனது குன்று என்னும் கவிதையில் கோவிலின் புனிதம் அமைச்சரால் காணாமல் போனதை அம்பலப்படுத்தியுள்ளார் கவிஞர். பதவி போனாலும் பட்டயங்களை விட மனமில்லை. மாண்புமிகு பட்டம் என்னும் கவிதை அரசியல்வாதிகளை ஆசை மனதின் வெளிப்பாடு. இந்தக் கவிதைகளைப் போல் ஆயிரம் கவிதை படைத்துள்ள இன்னாசி, இப்போது இல்லையே என்று ஏங்கச் செய்கிறது இந்த நூல்.