/ கதைகள் / எம்.கே.டி.பாகவதர் கதை
எம்.கே.டி.பாகவதர் கதை
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன் என்ற இசை மேதையின் வாழ்க்கை நிகழ்வுகளை தரும் நுால். மக்கள் மனதில் ஏழிசை மன்னர் என்ற அடைமொழியுடன் நிறைந்திருப்பதை கூறுகிறது.ஒரு திரைப்படம், 1000 நாள் ஓடிச் சாதனை படைத்தது. அதற்கு முன், பின் எந்தத் திரைப்படமும் ஓடவில்லை. அந்த படம் ஹரிதாஸ். பள்ளிப்படிப்பை விட ஆற்றில் துள்ளி நீந்துவதை மகிழ்ச்சியாக எண்ணியவர் தியாகராஜ பாகவதர். நினைத்ததை அடையும் எண்ணம் சிறுவயதில் அதிகம் இருந்தது. அந்த சிந்தனையே சாதனையானது. அவரது பாட்டைக் கேட்க கூட்டம் அலைமோதியது. புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தவறான நடத்தையால் கொலை வழக்கில் சிக்கி அழியும் நிலை ஏற்பட்டது. தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை சுவை குறையாமல் தரும் நுால்.– முகிலை ராசபாண்டியன்