/ வாழ்க்கை வரலாறு / மூணாறிலிருந்து மெரினா வரை
மூணாறிலிருந்து மெரினா வரை
காவல்துறை முன்னாள் டி.ஜி.பி., தேவாரம் எழுதியுள்ள சுயசரிதை நுால். ஐந்து முதல்வர்கள் காலத்தில் பணியாற்றிய தடயங்கள் பதிவாகி உள்ளன.போலீஸ்துறையில், 34 ஆண்டுகள் பொறுப்புள்ள பணிகளை ஆற்றியது, சிக்கலான நேரங்களில் சரியான முடிவால் அமைதி நிலைநாட்டியது, காவலர் நலனில் அக்கறை, மக்கள் பிரச்னைகளை அரசிடம் எடுத்து சென்றது மற்றும் சாகச நிகழ்வுகளுடன் துல்லியமாக பதிவாகியுள்ளது.மலை பிரதேசமான மூணாறில் பள்ளி வாழ்க்கை முதல், சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் தலைமை அலுவலக நிர்வாகம் வரை செய்திகள் நுட்பமாக பதிவாகியுள்ளன. வீரமிக்க செயல்கள், நகைச்சுவை மற்றும் வியப்பூட்டும் சம்பவங்கள், நெகிழ்வான தருணங்களுடன் பிடிப்பை தரும் சுயசரிதை நுால்.– மதி