/ கட்டுரைகள் / மூன்றெழுத்து தலைப்புகளில் முக்கியத் தகவல்கள்...
மூன்றெழுத்து தலைப்புகளில் முக்கியத் தகவல்கள்...
இயற்கையை புரிந்து கொள்ளும் நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால். கோட்டை, சாணம், தெய்வம், துட்டு, பறவை, பாட்டு, மலர், மரம், உணவு, ஊரணி என்ற தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.செஞ்சி புனித ஜார்ஜ் கோட்டை, டேனிஷ் கோட்டைகளின் சிறப்புகளும், வரலாற்று நிகழ்வுகளும் பதிவிடப்பட்டுள்ளன. சாணத்தின் மகத்துவம், இறைவன் அருள் பெறவும் ஆராதிக்கவுமான தீபம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. பறவைகளும், அவற்றின் புகலிட சிறப்புகளும் நிரல்படுத்தப்பட்டுள்ளன. வலசை பறவை பட்டியல் தரப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை பற்றியும் விவரித்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்