/ ஆன்மிகம் / முப்பெரும் ஆன்மீக வரலாறு
முப்பெரும் ஆன்மீக வரலாறு
நாயன்மார்கள், கிராம காவல் தெய்வங்கள், சக்தி பீடங்கள் பற்றிய தகவல்கள் உடைய நுால். சுருக்கமாக, தெளிவாக தேவைப்படும் அத்தனை முக்கிய நடைமுறைகளையும் திரட்டித் தந்திருக்கிறது. கிராம காவல் தெய்வங்கள் பற்றி அடுக்கடுக்காய் உள்ளன. கோவை கோனியம்மன், வீரபாண்டி கவுமாரியம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், முத்து இருளப்பசாமி பற்றி அவசியம் அறிய வேண்டிய தகவல்கள் உள்ளன. ஞானபீடம் வரிசையிலே திருவானைக்கா கோவில் உள்ளது. இக்கோவிலின் மதிய வேளை பூஜை சிறப்பு விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பிரணவ பீடமாம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் பற்றிய தகவல்களும் உள்ளன. பக்தி உடையோர் வீட்டில் இருக்க வேண்டிய ஆன்மிக பொக்கிஷம். – டாக்டர் கார்முகிலோன்