/ பொது / என் தம்பி வைரமுத்து- கலைஞர் சொற்பொழிவுகள்

"என் தம்பி வைரமுத்து கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாக்களில், முதலமைச்சராகவும், மூத்த சகோதரராகவும் விளங்கும் கலைஞரின் சொற்பொழிவுகள் அடங்கிய தொகுப்பு. என்றாலும், இவை சொற்பொழிவுகளாக மட்டும் இல்லாமல் 1989ல் "எல்லா நதியிலும் என் ஓடம் தொடங்கி 2007ல் "கருவாச்சி காவியம் வரை கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகள், நாவல் கள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றைப் பற்றிய கலைஞரின் திறனாய்வுகளின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும். இடைப்பட்ட 20 ஆண்டுகளில், கலைஞரின் வாசிப்பு அனுபவங்களின் விகசிப்பும் கவிஞரின் படைப்பாக்கத்தின் பரிணாமங்களும் இத்தொகுப்பு மூலம் வெளிப்படுகின்றன."இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, "தண்ணீர் தேசம், "தமிழுக்கு நிறம் உண்டு, "பெய்யெனப் பெய்யும் மழை, "வைரமுத்து கவிதைகள், "கள்ளிக்காட்டு இதிகாசம் உள்ளிட்ட பதினொரு விழாக்கள், பதினைந்து நூற்கள், பத்தொன்பது வருடங்கள் இருவரது இலக்கியப் பயணத்தின் வேகமும் வீச்சும் ஆர்வமும் ஆழமும் இதனால் தெரிய வருகின்றன.சினிமா ஒரு சந்தை, இதற்குள்ளே தமிழ் செய்ய முடியாது என்பதில் இருவருக்கும் இருவேறு கருத்துக்கள் இல்லை. அத்துடன் சந்தைக்கு வெளியே தமிழ் செய்ய முடியும் என்றும் இருவருமே நம்புகின்றனர். நம்புவதோடு நற்றமிழுக்கும் நல்ல பல வினைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். கலைஞர் தமிழைச் "செம்மொழி ஆக்கினார் என்றால் கவிஞரோ தமிழைச் "செழும் மொழி ஆக்கி வருகிறார். கலைஞரிடம் கவிஞனாக அறிமுகமாகிக் கவிப்பேரரசாக வளர்ந்த, வாழ்ந்த வரலாறு இதில் உள்ளது.


சமீபத்திய செய்தி