/ ஆன்மிகம் / நாகராஜா கோவில்
நாகராஜா கோவில்
பாம்பு வழிபாட்டின் அடிப்படையில் அமைந்த நாகராஜா கோவில் பற்றிய வரலாற்றை விரிவாக ஆராயும் நுால். நாகர்கோவிலில் அமைந்துள்ள இக்கோவிலின் அமைப்பு, கட்டடக் கலை, அதன் பழமை வரலாறு, சிற்பக்கலை, வழிபாட்டு முறை, திருவிழாக்கள் விபரம் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளது. இது, முன்பு சமண வழிபாட்டு இடமாக இருந்து, பின் சைவ, வைணவக் கோவிலாக மாறியது. இதற்கான ஆதாரங்களாக சமண மதத்திற்குரிய தெய்வ உருவங்கள் அங்கு காணப்படுகின்றன. ஹிந்து தெய்வங்கள் புதிதாக இடம் பெற்றுள்ளன. கள ஆய்வு செய்து தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.நாக வழிபாடு குறித்து உலகிலும், இந்தியாவிலும் வழங்கப்பட்டு வரும் செய்திகள் பெருமை சேர்க்கின்றன. கல்வெட்டுச் சான்றுகள் விரிவாக தரப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்திலுள்ள கோவில்கள் பற்றிய தகவல்கள் பயன் தருகின்றன.– ராம.குருநாதன்