/ அரசியல் / நகராட்சித் தலைவர் தர்மலிங்கம்
நகராட்சித் தலைவர் தர்மலிங்கம்
அரசியலும், சினிமாவும் பணம் காய்ச்சி மரங்கள் என்பதை சொல்லும் அரசியல் நாடக நுால்.நகராட்சித் தலைவர் பெயர் தர்மலிங்கம் ஊரை அடித்து உலையில் போடுபவர். அவருக்கு நேர் எதிர் அவரது மகன் உத்தமன். பெயருக்கு ஏற்ற உத்தமன். இந்த பின்னணியில் கதை பின்னப்பட்டுள்ளது. வீட்டு வரி, வீட்டு வாடகைக்கு உள்ள தொடர்பை நறுக்கென்று சுட்டிக்காட்டுகிறது. புறம்போக்கு நிலத்தை வளைத்து போடுவது கண்டு அங்கலாய்க்கிறது. குரல் வளர்த்தால் சினிமா பின்னணி பாடகனாகி தொண்டு செய்வதை வித்தியாசமாக பேசுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பாத்திரங்கள், இடம் பெற வேண்டிய பொருட்கள் நடிப்பதற்கு ஏற்ப எளிதாக விவரிக்கப்பட்டுள்ளது. பெண் கதாபாத்திரம் இல்லை என்பது புதுமையாக உள்ளது.– சீத்தலைச்சாத்தன்