/ கட்டுரைகள் / நகரத்தார் சிந்தனைகள்
நகரத்தார் சிந்தனைகள்
நகரத்தார் சமூக மக்கள் சிறப்பை உரைக்கும் நுால். பழக்க வழக்கம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, மரபு, சிக்கன வாழ்வு, உடல் நலம் பேணல் என, 58 தலைப்புகளில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.பருவ வயதில் பக்குவமாய் வளர்ப்பதும், பண்பாட்டை ஊட்டுவதும் தேர்ந்த கலையாக உள்ளதை தெளிவாக்குகிறது. இல்லறம் இனிமையுடன் திகழ பெண்களை மதிப்புடன் பேணுவதும், பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனைவி அருமை அறியாதவர் மகிழ்ச்சி அடைய இயலாது என்பதை முன்வைக்கிறது. உழைக்கும் பெண்களிடம் பரிவு காட்டுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தார் பெருமை கூறும் நுால்.– புலவர் சு.மதியழகன்